Swiss News In Tamil

லண்டன்–ஜெனீவா விமானத்தில் மின்னல் தாக்கம்: பயணிகள் திகில் அனுபவம்

லண்டன்–ஜெனீவா விமானத்தில் மின்னல் தாக்கம்: பயணிகள் திகில் அனுபவம்

London நகரிலிருந்து Geneva நோக்கி புறப்பட்ட British Airways விமானத்தில் பயணித்தவர்கள், எதிர்பாராத சூழ்நிலையால் திகிலூட்டும் அனுபவத்தை சந்தித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெனீவா விமான நிலையத்தை அணுகிய வேளையில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கியுள்ளது. தரையிறங்கும் நேரத்தில், விமானம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், முதல் முயற்சியில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியாமல், விமானி மீண்டும் வட்டமிட்டு மேலெழுந்து இரண்டாவது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

பின்னர், இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியிருந்தாலும், அந்த சில நிமிடங்கள் பயணிகளுக்கு பெரும் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். விமானம் திடீரென அதிர்ந்ததும், மின்னல் ஒளி தெரிந்ததும், சிலர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

n3 3

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாதது அதிர்ஷ்டவசமானதாகும். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் உடனடியாக மீண்டும் புறப்பட அனுமதிக்கப்படவில்லை. பின்னர், பொறியாளர்கள் விமானத்தை முழுமையாக பரிசோதித்து எந்த தொழில்நுட்ப கோளாறும் இல்லை என்று உறுதி செய்த பிறகே, அது மீண்டும் லண்டன் நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை காரணமாக ஏற்படும் இத்தகைய சவால்கள் விமானப் பயணங்களில் அபூர்வமானவை அல்ல என்றாலும், மின்னல் தாக்கம் போன்ற சம்பவங்கள் பயணிகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button