Swiss News In Tamil
Ziegelbrücke GL பகுதியில் அலுவலகம் உடைத்து திருட்டு.!!
Ziegelbrücke GL பகுதியில் அலுவலகம் உடைத்து திருட்டு.!! இன்று அதிகாலை (18/10/23) Glarus கன்டோனில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Glarus கன்டோனின் Ziegelbrücke பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்று இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் அத்துமீறி அலுவலகத்தை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர் அங்குள்ள முக்கியமான குறிப்பேடுகளை திருடிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளாறுன் கன்டோனல் போலீசார் மேற்கொண்டுவருவதுடன் சந்தேகநபர் பற்றிய தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக போலீசாருக்கு அறிவிக்கும்படியும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Quelle: Kantonspolizei Glarus Titelbild: Symbolbild © Kantonspolizei Glarus





