Swiss News In Tamil

Uster ZH பகுதியில் ரயில்வே தடுப்புகளை மோதிவிட்டு தப்பியவர் கைது.!

Uster ZH பகுதியில் ரயில்வே தடுப்புகளை மோதிவிட்டு தப்பியவர் கைது.! நேற்று மாலை சூரிச் கன்டோன் Uster நகரில் உள்ள Winterthurestrasse இல் லெவல் கிராசிங் தடுப்புகளை ஒரு டிரக் மோதி சேதப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. லெவல் கிராசிங் தடுப்புகளை மோதியும் ஓட்டுனர் தனது வானகத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-

நேற்று மாலை 5:00 மணியளவில், உஸ்டரில் உள்ள Winterthurerstrasse இல் உள்ள லெவல் கிராசிங்கில் வெளிநாட்டு நம்பர் பிளேட்கள் கொண்ட டிரக் ஒன்று இரண்டு லெவல் கிராசிங் தடைகளைத் தாக்கியதாக தகவல் கிடைத்தது.

Uster ZH Lastwagen beschadigt zwei Bahnschranken

விபத்து நடந்த இடத்திற்கு உஸ்டர் நகர காவல்துறையின் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கார் சென்ற போது, ​​டிரக் டிரைவர் தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றிருந்தார்.

உடனடியாக லெவல் கிராசிங் மூடப்பட்டு SBB செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அங்கு வந்த உஸ்டர் பேஸ் தீயணைப்பு படையினர், ரயில்களை தொடர்ந்து இயக்கும் வகையில் போக்குவரத்தை விரைவாக சீர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது. ஓரளவு தாமதங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தன..

சூரிச் கன்டோனல் காவல்துறையின் ரோந்துப் படையினர் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வின்டர்தூர் பகுதியில்  டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது ஓட்டுனர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளடுன் தனது குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இரவு 8.30 மணி வரை தொடர்ந்ததாகவும் குறித்த விபத்து சம்பத்தின் போதான சொத்து சேதம் சுமார் 8,000 பிராங்குகள் எனவும் குறிப்பிடத்தக்கது. குறித்த 22 வயதான ட்ரக் ஓட்டுனர் தற்போது போலீசார் விசாரணையில் வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேளுங்கள் :-

Related Articles

Back to top button