போதைப்பொருள் கடத்திய இருவர் சுவிஸ் தெற்கு எல்லையில் கைது.!
சுவிட்சர்லாந்தில் தெற்கு எல்லையில் வைத்து போதைப்பொருள் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அண்மையில் கணிசமான போதைப்பொருட்களை நாட்டின் தெற்கு எல்லையில் வைத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசினோ கன்டோனல் பொலிஸாரின் விரிவான நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கொண்டு சென்றதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இத்தாலிய உரிமத் தகடு மூலம் குறிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் அவர்கள் போதைப்பொருளை காவிச்சென்றுள்ளனர்.

50 வயதுடைய ஓட்டுநர், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதோடு, அதிகாரிகளை ஏமாற்ற, போலி பிரெஞ்சு பாஸ்போர்ட்டை வழங்கினார். அவனது கூட்டாளியும் சர்வதேசப் பயணத்திற்குப் பொருந்தாத இத்தாலிய அடையாள அட்டை மற்றும் காலாவதியான வதிவிட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை போலீசாருக்கு வழங்கியுள்ளார்.
இதனை தொடர்தே எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக கருதப்படுகிறது. போதைப்பொருள் சட்டத்தின் கடுமையான மீறியமை, சட்டவிரோதமாக வாகனம் ஓட்டியமை மற்றும், போலி ஆவணங்களை தயாரித்து போலீசாரை ஏமாற்றியவை போன்ற குற்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





