Swiss News In Tamil

பிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் சுவிஸ் பிரஜை உள்ளிட்ட 2 பேர் பலி

பிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் சுவிஸ் பிரஜை உள்ளிட்ட 2 பேர் பலி

பிரான்ஸில் இலகுரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் சுவிட்சர்லாந்து பிரஜை உள்ளிட்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பிரான்ஸின் செயிண்ட்-பான்ஸ் பகுதியில், இரண்டு இலகுரக பொழுதுபோக்கு விமானங்கள் மோதிய விபத்தில் ஒரு சுவிஸ் நாட்டவர் மற்றும் ஒரு ஜெர்மன் நாட்டவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிரஜை

பார்சலோனெட் விமான நிலையத்தில் இருந்து ஒரு இழுவை விமானமும், ஒரு கிளைடரும் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து உபேய் பள்ளத்தாக்கில் சிறிது நேரத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தினால் அருகாமையில் தாவரங்களுக்கு பரவிய தீ விரைவாக கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்திற்கான காரண்ஙகள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

Source:- Tamilnewsch

Related Articles

Back to top button