பாதசாரி கடவையில் 11 வயது சிறுவன் விபத்து : Chur சம்பவம்..!!
பாதசாரி கடவையில் 11 வயது சிறுவன் விபத்து : Chur சம்பவம்..!!
பாதசாரி கடவையில் 11 வயது சிறுவன் விபத்து : Chur சம்பவம்..!! கூர் இல் பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய குழந்தை பதினொரு வயது குழந்தை என தெரியவந்துள்ளது.
செவ்வாய்கிழமை மாலை மாலை சுமார் 5:00 மணியளவில், 28 வயதான ஒரு ஓட்டுநர் ஓட்டிச்சென்ற கார் ஒன்றிலையே விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதசாரி கடக்கும் பகுதியில், ஒரு பாதசாரி மூன்று வழிச் சாலையைக் கடந்தார். இதனால், டிரைவர் காரை நிறுத்தினார். ஓட்டுனர் மீண்டும் காரை ஓட்டிச் சென்றபோது, அந்த பதினோரு வயது சிறுவன் காரை கவனிக்காமல் சைக்கிளில் பாதசாரிக் கடவைக் கடந்துள்ளான்.
அதனால் கார் மோதியதில், சிறுவன் தரையில் விழுந்து படுகாயமடைந்தான். பின்னர் மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Quelle der Meldung: Stapo Chur





