Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மிகக்குறைந்த விலையில் எரிபொருள் நிரப்பவேண்டுமா.? மகிழ்ச்சியான செய்தி

சுவிட்சர்லாந்தில் மிகக்குறைந்த விலையில் எரிபொருள் நிரப்பவேண்டுமா.? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிட்சர்லாந்தில் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை என்பதை இங்கு வாகனம் ஓட்டும் அனைவருக்கும் தெரிந்த விடயம். இதே விடயத்தினை உறுதிப்படுத்தியிருக்கிறது TCS என்ற வாகன அமைப்பின் புதிய ஆய்வு . டிசிஎஸ் 3,800 சேவை நிலையங்களில் விலைகளை பகுப்பாய்வு செய்த தன் அடிப்படையில் இந்த முடிவை வெளியிட்டுள்ளது. பெரிய நகரங்களில் அல்லது நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் விலை அதிகமாக இருக்கும் போது, கிராமப்புறங்களில் உள்ள சிறிய பெட்ரோல் நிலையங்களில் அதே எரிபொருளை மலிவாக நிரப்ப முடியும். இதனால் ஒரு லிட்டருக்கு பல “ராப்பன்” களை (Cents) சேமிக்கலாம் என்பது ஓட்டுநர்களுக்கு பெரிய நிம்மதியைத் தருகிறது.

இதை எளிதாக தெரிந்துகொள்ள TCS அமைப்பு புதிதாக ‘பெட்ரோல் விலை ராடார்’ என்ற ஆன்லைன் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேரத்தில் உங்கள் பகுதியில் எரிபொருள் விலையை காட்டுவதோடு, எங்கு மிகக் குறைந்த விலையும் எங்கு அதிக விலையும் என்பதையும் துல்லியமாக தெரிவிக்கிறது. வெளியூர் பயணம் செல்லும் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பல தமிழர்களும் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், இந்த தகவல் அவர்களுக்கு செலவைக் குறைக்க உதவும்.

TCS-இன் சமீபத்திய ஆய்வின்படி, “பெட்ரோல் 95” வகையில் மிகக் குறைந்த விலை பெர்ன் மாகாணத்தின் பிரூக் பகுதியில் உள்ள நியூப்ரூக் கஃபே-பார் பெட்ரோல் நிலையத்தில் (Neubrück Café-Bar station) காணப்படுகிறது. அங்கு ஒரு லிட்டர் சராசரியாக 1.52 பிராங்குகள் மட்டுமே. அடுத்ததாக சொலோதுர்ன் மாகாணத்தின் மாட்ஸென்டார்ஃபில் உள்ள வோக்ட்லின்-மேயர் நிலையமும் (Voegtlin-Meyer AG in Matzendorf (Solothurn) , பெர்னின் லாங்கென்தால் Independent Gas Station நிலையமும் 1.53 பிராங்குகளுக்கு விற்கின்றன.

gas station 8626683 1280 2

ஆனால் அதே “பெட்ரோல் 95”-ஐ சூரிச் நகரின் தால்கார்டன் பார்க்கிங் கேரேஜ் நிலையத்தில் ஒரு லிட்டருக்கு சராசரியாக 2.37 பிராங்குகள் செலுத்த வேண்டியிருக்கும். இத்தாலி எல்லை அருகே உள்ள டிசினோ மாகாணத்தின் கொல்ட்ரேரியோவில் உள்ள BP நெடுஞ்சாலை நிலையத்திலும் அதே விலைதான். பெல்லின்சோனா பகுதியின் (Shell Autostrada) ஷெல் ஆட்டோஸ்ட்ராடா சவுத் நிலையத்தில் 2.35 பிராங்குகளாக உள்ளது.

“பெட்ரோல் 98” வகையில் மிக அதிக விலை பெல்லின்சோனாவின் ஷெல் ஆட்டோஸ்ட்ராடா சவுத் (Shell Autostrada) நிலையத்தில் 2.76 பிராங்குகள். அதே பகுதியின் வடக்கு நிலையம் 2.66 பிராங்குகளும், கொல்ட்ரேரியோ BP 2.57 பிராங்குகளும் வசூலிக்கின்றன. ஆனால் அதே 98 வகை டிசினோவின் லுகானோ அருகே உள்ள கொல்லினா டி’ஓரோ கேரேஜில் (Collina d’Oro garage) வெறும் 1.36 பிராங்குகளுக்கு கிடைக்கிறது. ஸ்விஸ் மாகாணத்தின் ப்ஃபைஃபிகானில் உள்ள அக்ரோலா நிலையம் (Agrola station in Pfäffikon -Schwyz) 1.42 பிராங்குகளும், ஆராவின் மெர்சிடஸ்-பென்ஸ் நிலையம் 1.59 பிராங்குகளும் விற்கின்றன.

டீசல் வாகன ஓட்டிகளுக்கு ப்ரிபூர்க் மாகாணத்தின் Domdidier (Fribourg) டோம்டிடியரில் உள்ள (MP Biodiesel station) எம்பி பயோ டீசல் நிலையம் சிறந்த தேர்வு. அங்கு ஒரு லிட்டர் சராசரியாக 1.59 பிராங்குகள் மட்டுமே. அடுத்ததாக பிரூக் நியூப்ரூக் நிலையம் உள்ளது. அதிக விலை டிசினோவில்தான் – பியோட்டாவின் எனி நிலையத்தில் (Eni station in Piotta) 2.46 பிராங்குகள், கொல்ட்ரேரியோவின் BP மற்றும் Eni நிலையங்களில் 2.44 மற்றும் 2.43 பிராங்குகள்.

பொதுவாக நெடுஞ்சாலை ஓரங்களிலும் நகர மையங்களிலும் விலை அதிகம் என்பதால், அடுத்த முறை பயணம் போகும் போது TCS ராடாரை ஒரு முறை பார்த்துவிட்டு போங்கள். சிறிய திட்டமிடலே பெரிய சேமிப்பைத் தரும். சுவிஸ் வாழ்க்கையில் இப்படியொரு டிப்ஸ் நமது தமிழ் சமூகத்துக்கு எப்போதும் உதவியாக இருக்கும். பயணம் செல்லுங்கள், பணம் சேமியுங்கள், இனிமையாக வாழுங்கள்!

அப்படியோ மறக்காமல் இந்த வீடியோவை கார் வைத்திருக்கும் உங்கள் நண்பர் நண்பிகளுக்கு Share பன்னிவிடுங்கள் அப்போதான் இந்தமாதிரி பயனுள்ள காணொளிகளை உங்களுக்கு தொடர்ச்சியாக தருவதற்கு எமக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும். அதே நேரத்தில் Subscribe செய்யவும் மறக்காதீங்க..

Related Articles

Back to top button