இரு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து : இளைஞன் பலி.! மூவர் காயம்.!
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞன் பலி.! மூவர் காயம்.! நேற்று வியாழக்கிழமை சென்ட்காலன் கன்டோனின் புட்ஸ்வில் பகுதியில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5:45 அளவில் எச்16 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் 20 வயதுடைய சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் குறிப்பிடப்படாத காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் அவசர சேவைகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
34 வயதுடைய நபர் ஒருவர் எச்16 நெடுஞ்சாலையில் வில் இருந்து வற்வில் நோக்கி தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில்இ 20 வயது இளைஞன் ஒருவன் 21 வயது பெண் பயணி மற்றும் 23 வயது பயணியுடன் எதிர்திசையில் தனது காரை ஓட்டிச் சென்றபோதே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் சூரிச் மாகாணத்தில் வசிக்கும் 20 வயதான இளைஞனே பலியாகியுள்ளார். இறந்தவரின் காரில் பயணித்த 23 வயது பெண் மற்றும் 21 வயதுடைய பயணிகள் மற்றும் 34 வயது சாரதி ஆகியோர் காயங்களுடன் உயிர்தப்பினர்.
மீட்பு பணிகளுக்காக குறித்த சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: St.Gallen Cantonal Police
Image source: St.Gallen Cantonal Police





