Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் கோவிட் பலியெடுத்த உயிர்கள் எத்தனை தெரியுமா.?

சுவிட்சர்லாந்தில் கோவிட் பலியெடுத்த உயிர்கள் எத்தனை தெரியுமா.? உலகின் சில நாடுகளில் கோவிட் பெருந்தொற்று பரவுகை மீளவும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்து அநேகமான கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இன்றைய தினத்துடன் முடிவடைந்த ஒரு வார காலப் பகுதியில் 4166 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், கோவிட், சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews
சுவிட்சர்லாந்தில் கோவிட் பலியெடுத்த உயிர்கள் எத்தனை தெரியுமா.?

டிசம்பர் மாதம் 29ம் திகதி ஒரு வார கால எண்ணிக்கை 12632 ஆக காணப்பட்டது. இந்த வாரத்தில் சுவிட்சர்லாந்தில் 25 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 225 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுவதனை அரசாங்கம் நிறுத்திக் கொண்டதனைத் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது வரையில் நாட்டில் கோவிட் காரணமாக 13800 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button