போஸ்னியா போரின் இருண்ட ரகசியம்… சுவிஸ் இராணுவம் மீது கொலைவெறி குற்றச்சாட்டு
போஸ்னியா போரின் இருண்ட ரகசியம்… சுவிஸ் இராணுவம் மீது கொலைவெறி குற்றச்சாட்டு
1990களில் நடந்த போஸ்னியா போர்… மனித வரலாற்றிலேயே மறக்க முடியாத இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. 1425 நாட்கள் முற்றுகையில் சிக்கிய சாராயேவோ… தினமும் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு… உயிர் பிழைப்பதே ஒரு போராட்டம். அந்த நகரத்தில் சுமார் 11,000 பேர் உயிரிழந்தார்கள்… அதில் 1,600க்கும் மேற்பட்ட குழந்தைகள். ஒவ்வொரு தெருவிலும் பயம்… ஒவ்வொரு நாளும் மரணம் அருகில்.
ஆனா… இப்போ வெளியாகும் தகவல்கள்… இந்த போரின் இன்னொரு கொடூரமான பக்கம். சில பணக்கார மேற்கத்திய ஐரோப்பியர்கள்… “சுற்றுலா” பெயரில்… உண்மையில் மனிதர்களை வேட்டையாட வந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு. வார இறுதி சுவாரஸ்யம் மாதிரி… விமானத்தில் பெல்கிரேட்… அங்கிருந்து ஹெலிகாப்டர்… நேராக போர்க்களம்.
அங்கே… அவர்கள் சாதாரண பார்வையாளர்கள் இல்ல. ஸ்னைப்பர் துப்பாக்கி கையில்… உயரமான கட்டிடங்களின் மேல் இருந்து… தெருவில் ஓடும் பொதுமக்களை குறிவைத்து சுட்டதாக சாட்சிகள் சொல்றாங்க. பெண்கள்… குழந்தைகள்… முதியவர்கள்… யாரையும் விட்டு வைக்காமல். இது போரின் ஒரு பகுதியா… இல்ல கொடூரமான விளையாட்டா…ன்னு புரியாத நிலை.
ஒரு “வேட்டை ட்ரிப்”க்கு 70,000 முதல் 90,000 ஃப்ராங்க் வரை செலவாகியிருக்குமாம். ஆனா அதுவே முடிவல்ல… குழந்தைகளை சுட்டால் கூடுதல் பணம் கொடுத்ததாகவும் தகவல்கள். சிலர் போட்டி போட்ற மாதிரி… அதிக பேரை சுட முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சாட்சியின் படி… ஒரே ஆள் ஆறு மணி நேரத்துக்குள் இரண்டு குழந்தைகள், ஒரு பெண், மூன்று முதியவர்களை சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்தாலிய எழுத்தாளர் எஸியோ கவன்சென்னி “வார இறுதி ஸ்னைப்பர்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் 230க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் மட்டும் இல்லாமல்… பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரியா… கூட சுவிட்சர்லாந்திலிருந்தும் சிலர் இதில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனா இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு இருந்தும்… சுவிட்சர்லாந்து தரப்பில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. அதுவே இன்னொரு சந்தேகத்தை எழுப்புகிறது.
இதில் இன்னும் நடுங்க வைக்கும் விஷயம்… இந்த “மனித வேட்டைக்காரர்கள்” தங்கள் கொலைகளை நினைவுச்சின்னமாக வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. வண்ணமிடப்பட்ட குண்டு உறைகள்… பிங்க் – பெண் குழந்தை… நீலம் – ஆண் குழந்தை… மஞ்சள் – பெண்கள்… கருப்பு அல்லது நீலம் – முதியவர்கள்… சிவப்பு அல்லது பச்சை – இராணுவம். ஒரு வேட்டையாடி திரும்பும் போது எடுத்துச் செல்லும் “ட்ரோபி” மாதிரி.
ஒரு முன்னாள் போராளி சொல்வது… “அவர்கள் கட்டுப்பாட்டைத் தாண்டி இருந்தாங்க… சுட்ட பிறகு குடித்து கொண்டாடுவாங்க… இது அவர்களுக்கு விளையாட்டு மாதிரி இருந்தது…”ன்னு.
இவை எல்லாம் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளாக இருந்தாலும்… இந்தக் கதைகள் வெளியில் வர ஆரம்பித்திருப்பது… அந்த போரின் உண்மைகள் இன்னும் முழுமையாக சொல்லப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. சாராயேவோவின் அந்த இருண்ட இரவுகள்… இன்னும் பல ரகசியங்களை மறைத்தே இருக்கலாம்… அவை வெளிவந்தால் உலகமே அதிரக்கூடும்.





