Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து ஏரிகளில் தொடரும் அபாய நிலமை

சுவிட்சர்லாந்து ஏரிகளில் தொடரும் அபாய நிலமை

சுவிட்சர்லாந்து ஏரிகளில் தொடரும் அபாய நிலமை வானிலை வெப்பமடைந்து, சமீபத்திய புயல்களின் தாக்கம் குறைந்து வந்தாலும், ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீந்துவது இன்னும் ஆபத்தானது என்று சுவிஸ் உயிர்காக்கும் சங்கம் எச்சரிக்கிறது.

கடந்த நாட்களில், சூரிச் மாகாணத்தில் உள்ள ரைன் நதியில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து

நீச்சலில் ஈடுபடவிரும்புபவர்கள் தற்போதைக்கு அவற்றை தவிர்ப்பது நல்லது என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகமாக உள்ளதோடு நீரோட்டங்கள் வலுவாக இருப்பதால், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீரில் சிக்கினால் வெளியேறுவது கடினம் எனவும் பாதுகாப்பான சூழ்நிலை உருவாக இன்னும் பல நாட்கள் ஆகும் என்று உயிர்காக்கும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button