சுவிஸில் இருந்து இத்தாலி சென்ற வேன் பயங்கர விபத்து : ஒருவர் பலி
சுவிஸில் இருந்து இத்தாலி சென்ற வேன் பயங்கர விபத்து ஒருவர் பலி
சுவிஸில் இருந்து இத்தாலி சென்ற வேன் பயங்கர விபத்து : ஒருவர் பலி சுவிட்சர்லாந்தில் இருந்து இத்தாலிக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வேன் புதன்கிழமை, பயங்கர விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 44 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதோடு அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் A14 நெடுஞ்சாலையில், (Bari) பாரியின் புறநகரில், பிட்ரிட்டோ (Bitritto) அருகே, குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்ட வெள்ளை நிற வேனில் சுவிட்சர்லாந்தில் இருந்து சென்ற ஏழு பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் 44 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் மூன்று குழந்தைகள் 15 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களும் ஏழு வயது சிறுமியும் அடங்கும். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதோடு அவர்களுடன் பயணித்த 59 வயதுடையவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், 30 வயதுடைய ஒருவரும், 17 வயதுடைய இளைஞரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விபத்து எப்படி நடந்தது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. விபத்து பணியின் போது நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.
Source:- bluewin





