Swiss News In Tamil

சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்காக விமானம் ஏறிய இளம்பெண்: காத்திருந்த இன்ப அதிர்ச்சி

சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்காக விமானம் ஏறிய இளம்பெண்: காத்திருந்த இன்ப அதிர்ச்சி இளம்பெண் ஒருவரும் அவரது தாயும், செஷல்ஸ் தீவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்காக விமானம் ஏறியுள்ளனர்.

விமானத்தில் ஏறிய இருவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த விமானத்தில் இருந்த மொத்த பயணிகள், அவர்கள் இருவர் மட்டும்தான் என்கிறார்கள் அவர்கள்!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, Zoe Doyle (25)ம் அவரது தாயாகிய Kimmy Chedel (59)ம் செஷல்ஸ் தீவிலிருந்து சுவிட்சர்லாந்து செல்வதற்காக விமானம் ஏறியுள்ளனர். அவர்களைத் தவிர விமானத்தில் யாரும் இல்லாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட இருவரும், தங்கள் பயணத்தை ஜாலியாக என்ஜாய் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர்களைத் தவிர முதல் வகுப்பில் நான்கு பயணிகள் இருந்துள்ளார்கள் என்றாலும், அவர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. ஆகவே, இவர்கள் பயணித்த எக்கானமி வகுப்பில் இவர்கள் இருவர் மட்டும்தான் பயணிகள்.

ஆக, பணிப்பெண்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு, ஆட்டமும் பாட்டமுமாக வீடியோவும் எடுத்துக்கொண்டு தாங்கள் பயணத்தை என்ஜாய் செய்ததாக தெரிவிக்கிறார் Zoe.

அது மட்டுமின்றி, பணிப்பெண்கள், தங்கள் இருவருக்கும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தங்களுக்கு சுற்றிக் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் Zoe.

 

Sieh dir diesen Beitrag auf Instagram an

 

Ein Beitrag geteilt von Planet 24/7 (@planet247)

Related Articles

Back to top button