சுவிஸ்சில் இரவு நேரத்தில் மூன்று நிறுவனங்களில் திருட்டு; பல லட்சம் மதிப்பிலான சேதம்
சுவிஸ்சில் இரவு நேரத்தில் மூன்று நிறுவனங்களில் திருட்டு; பல லட்சம் மதிப்பிலான சேதம்
ஞாயிற்றுக்கிழமை 16 நவம்பர் இரவு 11.19 மணி முதல் திங்கட்கிழமை 17 நவம்பர் அதிகாலை 03.38 மணி வரை சுவிஸ்சின் Ziegelbrückstrasse (சீகல்புறுக்க திராச) பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் கொள்ளை நடந்துள்ளது. இந்த திருட்டில் மொத்தம் மூன்று நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என போலீஸ் தெரிவித்துள்ளது.
மர்ம நபர்கள் எந்த திசையிலிருந்து வந்தார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. அவர்கள் முதலில் ஒரு தோட்டப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் வளாகத்துக்கு நுழைந்துள்ளனர். கட்டிடத்தின் தெற்கு பக்கத்தில் உள்ள கண்ணாடி வீட்டு பகுதியின் இரண்டு கதவுகளை அறியப்படாத கருவிகளைப் பயன்படுத்திக் கட்டவிழ்த்து உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் ஒரு சறுக்கும் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து விற்பனை மையத்துக்குள் சென்றுள்ளனர்.
உள்ளே நுழைந்த திருடர்கள் மேலும் பல கதவுகளை உடைத்து பல அறைகளில் நுழைந்து அனைத்து இடங்களையும் தேடி ஏராளமாக பெறுமதியான பொருட்களை எடுத்துச்சென்றுள்ளனர்.

அதே கட்டிடத்தில் உள்ள மற்ற இரண்டு நிறுவனங்களுக்கும் திருடர்கள் படிக்கட்டின் வழியாக வலுக்கட்டாயம் நுழைந்துள்ளனர். இங்கு அவர்கள் பாரிய பொருட்களை திருடி அதை லிப்ட்டின் மூலம் தரைத்தளத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு இன்னும் கணக்கிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கட்டிடத்திலும் நிறுவனங்களிலும் பல இலட்சம் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுவிஸ்சில் சமீபகாலமாக வணிக வளாகங்களை குறிவைக்கும் இப்படியான நுணுக்கமான கொள்ளைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
© Kapo GL





