Swiss News In Tamil

ரயிலில் மோதுண்டு இரண்டு நாய்கள் மற்றும் ஒருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதுண்டு இரண்டு நாய்கள் மற்றும் ஒருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதுண்டு இரண்டு நாய்கள் மற்றும் ஒருவர் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு முன்னதாக, Aarberg இல் உள்ள ஒரு காட்டுப் பாதைக்கு அருகில் Alte Lysstrasse க்கு அருகில் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டதாக பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவிக்கப்பட்டது.

அவசரகால சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தபோது மனிதன் மற்றும் இரண்டு நாய்களின் உயிர் அற்ற உடலங்களை மட்டுமே காணமுடிந்தது. உயிரிழந்தவர் பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 63 வயதான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்.

முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, அந்த நபர் இரண்டு நாய்களுடன் தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றபோது, ​​அவரும் நாய்களும் ரயிலில் மோதுண்டுள்ளனர்.

ரயிலில்

அதற்கான காரணங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ரயிலின் அவசரகால பிரேக்கிங் உடனடியாக  அழுத்தப்பட்ட போதிலும் பலனழிக்கவில்லை என சொல்ப்படுகிறது.

மாற்றுப் பேருந்துகள் மூலம் ரயில் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டனர். பெர்ன் கன்டோனல் காவல்துறையின் பல்வேறு சேவைகளுக்கு மேலதிகமாக, SBB ஊழியர்கள், ஒரு ஆம்புலன்ஸ் குழு மற்றும் பெர்ன் பல்கலைக்கழகத்தில் தடயவியல் மருத்துவ நிறுவனம் ஆகியவை கடமையில்  ஈடுபட்டிருந்தனர்.

இதன் பின்னணி மற்றும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பெர்ன் கன்டோனல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button