Swiss News In Tamil

சென்ட்கேலன் கிளப்பில் திடீர் சோதனை : 10 பேர் கைது

சென்ட்கேலன் கன்டோனல் போலீசார் சென்வால்ட் பகுதியில் உள்ள கிளப்பில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது பத்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாக சென்ட்காலன் கன்டோனல் போலீசார் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கிளப்பின் இரண்டு நிர்வாக இயக்குநர்களும் அடங்குவர். 49 வயதான செர்பியரும் 48 வயதான ஒருவரும் சட்டவிரோதமாக மூன்றாம் நாட்டு நாட்டினரை வேலைக்கு அமர்த்தியுள்ளமையே இவர்களின் கைதுக்கு காரணமாகும்.

சென்ட்கேலன்

கடந்த வியாழனன்று போலீசார் நடத்திய சோதனையில், சுவிட்சர்லாந்திற்கு சட்டவிரோதமாக நுழைந்தமை, சரியான பணி அனுமதியின்றி பணிபுரிந்தமை போன்ற குற்றங்களுக்காக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்களையும் ஒரு ஆணையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் அறிக்கையின்படி, தொழிலாளர்கள் செர்பியா, கொசோவோ மற்றும் அல்பேனியாவில் இருந்து வந்த 25 முதல் 53 வயதுக்குட்பட்ட பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button