Swiss News In Tamil

தாய்லாந்து சென்ற சுவிஸ் விமானத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

தாய்லாந்து சென்ற சுவிஸ் விமானத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

தாய்லாந்து சென்ற சுவிஸ் விமானத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நேற்று செவ்வாய்க்கிழமை பாங்காக்கிற்குச் சென்ற சுவிஸ் விமானம் தாய்லாந்திற்கான தனது பயணத்தை இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் ரத்துசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட குறித்த விமானம் சுமார் இரண்டு மணி நேரம் பயணித்து மீண்டும் சூரிச் விமானநிலையத்துக்கு திரும்பி வந்தது.

தாய்லாந்து

ரேடார் குறைபாடுகள் காரணமாகவே பயணத்தை நிறுத்தியதாகவும் எனவே ரேடார் இல்லாமல் பறப்பதைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் விமானசேவை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது.

குறித்த விமானத்தின் பயணித்த பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இன்றைய தினம் மீண்டும் விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button