Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் “TheRise” அமைப்பின் உலகபொருளாதார மாநாடு

சுவிட்சர்லாந்தில் "TheRise" அமைப்பின் உலகபொருளாதார மாநாடு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில், யூன் மாதம் 7,8,9ம் திகதிகளில் இம் மகாநாடு நடைபெறவுள்ளது. அதில், பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்கள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

TheRise

3 நாட்களாக இடம்பெறவிருக்கும் குறித்த நிகழ்வில் இலங்கை, இந்தியா, உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தரவிருக்கின்ற தமிழ் ஆளுமைகளால் பல்தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவிருக்கின்றன.

TheRise

இம்மகாநாடு சுவிஸ்நாட்டில் உலகலாவிய TheRise நிறுவனத்தின் சுவிஸ் நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button