Swiss News In Tamil

சுவிஸில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

சுவிஸில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

சுவிட்சர்லாந்தில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிறுவர் பாலியல் காணொளிகள் தயாரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது. பாசல், லுசேர்ன் மற்றும் சூரிச் ஆகிய பகுதிகளில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் பாலியல்

குறித்த கைதுகள் குறித்து சுவிட்சர்லாந்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தில் இவ்வாறான சிறுவர் பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் இது குறித்து பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button