Swiss News In Tamil

சுவிஸில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை தளர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு

சுவிஸில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை தளர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தில் ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றான சமாதானமான பேரணிகளுக்கும் கருத்து வெளிப்படுத்தும் உரிமைக்கும் எதிரான தடைகள் கடுமையாகும் நிலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை (AI) தனது ஆண்டு அறிக்கையில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

சூரிச் (Zurich) மாநிலத்தில் புதிய சட்டம், முன் அனுமதி இல்லாமல் பேரணிகள் நடத்துவதை தடைசெய்கிறது. மேலும், பேரணிகளை ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து காவல்துறை செலவுகளை வசூலிக்க அனுமதிக்கிறது.

ஜெனீவாவில் (Geneva), நகர மையத்தில் அதிகளவில் அரசியல் பேரணிகள் கடைக்காரர்களை பாதிப்பதாக கூறி, எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பேரணிகள் நடத்தும் உரிமையை மாநில அரசு குறைத்துள்ளது.

மேலும், காசா போருக்கு எதிராக போராட்டங்களில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு, தண்டனை அல்லது சட்ட நடவடிக்கைகள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் மற்றும் சமாதானமான எதிர்ப்பு உரிமைகள் ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள். இவை சுவிட்சர்லாந்தின் மனித உரிமை பற்றிய உண்மையான தத்துவத்தை சோதிக்கின்றன” என சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் பணிப்பாளர் அலெக்ஸாண்ட்ரா கார்லே கூறியுள்ளார்.

உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளை உறுதியாக ஆதரிக்கும் வகையில் சுவிட்சர்லாந்து முன்னோடி பங்கு வகிக்க வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button