zofingen தாக்குதலில் கருக்கலைந்த பெண் : கணவன் உருக்கம்
Zofingen Miscarriage in attack
மே 15 அன்று, zofingen AG பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் பலரை கத்தியால் தாக்கிய சம்பவம் இடம்பெற்றது. அச்சம்பவத்தின்போது 6 பேர் காயமடைந்தனர்.
நேற்று வியாழக்கிழமைஇ பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் கணவர் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில்,

அன்றைய தாக்குதலின் தாக்குதல்தாரி எனது மனைவியை பின்புறத்தில் இருந்து கடுமையாக தாக்கினார். எனது மனைவி கருவுற்றிருந்தாள். அதிர்ஷ்டவசமாக அவன் அவள் வயிற்றை காயப்படுத்தவில்லை. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவி முகம் வீங்கிய நிலையில் காணப்படுகிறார்.
எனினும் வயிற்றில் இருந்த குழந்தையை தற்போது நாங்கள் இழந்துள்ளோம்’ என மிகவும் வருத்தத்துடன் தனது பதிவை இட்டுள்ளார். அவரது பதிவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருவதோடு ஆறுதல் கூறிவருகின்றனர்.
பிறக்காத குழந்தையின் சந்தேக மரணம் குறித்து காவல்துறையோ அல்லது அரசு வழக்கறிஞர் அலுவலகமோ தற்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source:- Kapo Zurich/Telezurich





