Swiss News In Tamil

Männedorf “நிர்வாண கொலையாளி” : வெளியான புதிய தகவல்கள்

Na*ked man kills 35-year-old Sagar in Gold Coast park

Männedorf “நிர்வாண கொலையாளி” : வெளியான புதிய தகவல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மனடோர்ப் பகுதியில் உள்ள பூங்காவில் கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று நிர்வாணமான இளைஞன் ஒருவர் அங்குள்ள பலரை தாக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பூங்காவில் பல பெண்களின் அலறல் சத்தமும் கேட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞன் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளிக்க அங்கு விரைந்த போலீசார் நிர்வாண இளைஞனை கைது செய்தனர்.

மேலும் உயிர்போகும் நிலையில் ஒரு பெண் துடித்துக்கொண்டிருந்ததை அவதானித்தனர். உடனடியாக பெண்ணை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது ஒரு சில நிமிடங்களிலையே பெண் உயிர் பிரிந்துள்ளது.

எனினும் குறித்து பெண் யார் எங்கு வசிப்பவர் போன்ற தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. குற்றவாளிக்கும் பெண்ணுக்கும் எந்தவித தொடர்புகளும் இருந்திருக்குவில்லை என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

தற்போது குறித்த பெண் தொடர்பாக ஒரு சில தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர் அதே பகுதியில் வசிக்கும் அன்னா என்றழைக்கப்படுகின்ற 35 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் திருமணம் முடித்து மனடோர்ப் பகுதியில் வசித்து வந்தவர் எனவும் குழந்தைகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் இன்னுமொரு வயோதிப பெண் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கோரச்சம்பவம் தொடர்பாக நேரில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Back to top button