Swiss News In Tamil

ஆஸ்திரியப் பிரதிநிதியுடன் ஒப்பந்தம் செய்த சென்ட்காலன் கன்டோன் மந்திரி

Cantonal Minister of Sentcaln who made the agreement with the Austrian delegation

ஆஸ்திரியப் பிரதிநிதியுடன் ஒப்பந்தம் செய்த சென்ட்காலன் கன்டோன் மந்திரி சென்ட்காலன் கன்டோனின் சுற்றுச்சூழல் மந்திரி ஆல்பர்ட் ரோஸ்டி மற்றும் ஆஸ்திரியப் பிரதிநிதி நோர்பர்ட் டோட்ஷ்னிக் இருவருக்கிடையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்காலன் விட்நாவ்வில் உள்ள ஆல்பைன் ரைனில் வெள்ளப் பாதுகாப்பு திட்டத்திற்கான மாநில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளும் தலா ஒரு பில்லியன் பிராங்குகளை இத்திட்டத்திற்காக ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளன.

4944046162207264

சுவிட்சர்லாந்தும் ஆஸ்திரியாவும் இவ்வாறு 26 கிலோமீட்டர் நீளமுள்ள ரைன் நதியில் அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளப் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றன.

சுமார் இரண்டு பில்லியன் பிராங்குகளின் செலவுகளை இரு மாநிலங்களும் சமமாக ஏற்கும். சுவிஸ் தரப்பில் இருந்து மத்திய அரசு 80 சதவீத நிதியினையும் சென்ட்கேலன் மாகாணம் 20 சதவீத நிதியினையும் வழங்கவுள்ளது.

Related Articles

Back to top button