Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளியை கொலை செய்த நபர்

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளி ஒருவரை படுகொலை செய்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் டிசினோ கன்டோனின் லொட்ரினோவில் இடம்பெற்றுள்ளது.

21 வயதான ரொமானியாவைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் தொழிலாளியை

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த பெண்ணை சுட்டுக் கொன்ற நபர் தனக்குத்தானே துப்பாக்கிச் சூடு நடத்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button