Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் 6000 நிறுவனங்கள் வாங்குரோத்து

சுவிட்சர்லாந்தில் சுமார் 6000 நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 ஆம் ஆண்டை விடவும் 19 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுவிட்சர்லாந்தின் தென்பகுதிகளில் அதிக அளவு நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்துள்ளனர்.

சுமார் 27 வீதமான நிறுவன வங்குரோத்துக்கள் சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் மத்திய சுவிட்சர்லாந்தில் 23 வீதமாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விருந்தோம்பல் துறை அதிக அளவு பாதிப்புகளை எதிர் நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, 2024 ஆம் ஆண்டில் சுமார் 52973 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2023 ஆம் ஆண்டை விட மூன்று வீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button