Swiss News In Tamil

ஆர்காவ் இல் நடந்து கொடுரசம்பவம் – வெளியான புதிய தகவல்

ஆர்காவ் கன்டோன் பாடனில், கடந்த 2023, செப்டம்பர் மாதம் திடுக்கிடும் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

அச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து புதிய செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2, 2023 வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி ஒருவரின் அறையில் மர்ம நபர் ஒருவர் ஒளிந்திருந்து, நள்ளிரவு நேரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆர்காவ்

சிறுமியின் கழுத்தை நெரித்து உயிர் போகும் அளவுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியவேளை சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர்கள் விழித்துள்ளனர். சிறுமியின் அறைக்கு சென்று பார்த்துபோது முகமூடி அணிந்த இளைஞன் ஒருவர் சிறுமி மீது கிடப்பதை அவதானித்து அலறியிருக்கிறார்கள்.

இதனை அவதானித்த இளைஞன் அந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளான். குறித்த இளைஞன் அதே குடியிருப்பில் வசிக்கும் நன்கு தெரிந்தவர் என்பது சிறுமியின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

காலை வேளையில் வீடு திரும்பிய 17 வயது இளைஞன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தான். இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் புதிய முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.

சிறுவன் குறித்த குற்றச்செயலில் இருந்து வெளியே வந்துவிட வாய்ப்பு உள்ளதாகவும் தாம் அந்தச்சம்பவத்திற்குபின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள். சிறுவனை வெளியில் கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.

எனினும் இளைஞன் இன்னும் 18 வயதை தாண்டவில்லை என்பதால் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button