Swiss News In Tamil

லுசேர்ன் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது

லுசேர்ன் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது

லுசேர்ன் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது திங்கள் கிழமை காலை லுசேர்ன் சுர்சே பகுதியில் உள்ள வங்கி ஒன்று மர்மநபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக லூசெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொள்ளையர் சில மணிநேரங்களுக்குப் பிறகு பிடிபட்டார் என குறித்த அலுவலகம் அறிவித்துள்ளது.

சம்பவ தினத்தன்று பிற்பகல் 3 மணியளவில்இ லூசர்ன் போலீசார் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கொள்ளையனைப் பிடித்து திருடப்பட்ட பணத்தை கைப்பற்றினர்.

லுசேர்ன் வங்கி

லூசர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பின்படி, குற்றம் மற்றும் மனிதனின் நோக்கம் குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் 30 வயதான சுவிஸ் நபர் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் குற்றவாளி தொடர்பாக இன்னும் சரியான முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

PilatusToday

Related Articles

Back to top button