Swiss News In Tamil

உக்ரைனுக்கு 10 தீயணைப்பு வாகனங்களை வழங்கிய சுவிஸ் அரசாங்கம்

உக்ரைனுக்கு 10 தீயணைப்பு வாகனங்களை வழங்கிய சுவிஸ் அரசாங்கம்

உக்ரைனில் நடந்து வரும் போர் நேரத்தில் ஒரு மனிதாபிமான உதவியாக 10 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. லவுசான் – சுவிட்சர்லாந்தின் வாட் (Vaud) கன்டோனினால் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் வாகனம் ஏப்ரல் மாத இறுதியில் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ் வாகனங்களை வழங்கும் உத்தியோகபூர்வ விழா லவுசானில் நடைபெற்றது.

உக்ரைன் தூதுவர் இரினா வெனெடிக்டோவா, அரச சார்பற்ற நிறுவனமான Risk Reduction Foundation இயக்குநர் அந்த்ரேய் யாட்செனியா, மற்றும் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினரும் சுவிஸ் தீயணைப்பு பிரிகேட்களின் தலைவர் ஒருவருமான லோரன்ட் வெர்லி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

சுவிஸ் அரசாங்கம்
Keystone SDA

வழங்கப்படும் வாகனங்கள் இருபது வருடங்களுக்கு மேல் பழையவை என்றாலும் சிறப்பான செயல்திறனுடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இவை முழுமையாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஜெர்மனி மற்றும் போலந்து வழியாக அனுப்பி வைக்கப்படும் இந்த வாகனங்கள் உக்ரைனில் உள்ள இரண்டு மீட்பு அமைப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது.

Keystone SDA

Related Articles

Back to top button