Swiss News In Tamil

சுவிஸ் கடிகார ஏற்றுமதியில் மூன்றாவது ஆண்டாக சாதனை.!!

சுவிஸ் கடிகார ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது. இது 7.6 சதவீதம் உயர்ந்து 26.7 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருவாயை பெற்றுத்தந்துள்ளதாக தொழில்துறை ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிஸ் கடிகார ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையான யுனைடெட் ஸ்டேட்ஸில் இடம்பெற்ற விற்பனையால் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அங்கு அவை முழு ஆண்டுக்கு 35.1 சதவீதம் உயர்ந்தன என்று வாட்ச்மேக்கர்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுவிஸ் கடிகார ஏற்றுமதி, சாதனை, swiss watches

மறுபுறம், சீனாவுக்கான ஏற்றுமதி ஆண்டு இறுதியில் சிறிது ஏற்றம் காணப்பட்டாலும் 6.9 சதவீதம் குறைந்துள்ளது.

கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு சுவிஸ் வாட்ச் ஏற்றுமதி விரைவாக மீண்டு, 2021 மற்றும் 2022 இல் சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் 2024ம் ஆண்டிற்கான ஏற்றுமதியும் அதிகரித்து அதிக வருமானத்தை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button