Swiss News In Tamil

சுவிஸ் ட்ரோன் விநியோகம் – காலம் தாழ்த்தும் இஸ்ரேல்

சுவிஸ் ட்ரோன் விநியோகம் – காலம் தாழ்த்தும் இஸ்ரேல் சுவிட்சர்லாந்திற்கான ட்ரோன் விநியோகத்தை, இஸ்ரேல் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2024ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலிய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்திற்கு வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2026ம் ஆண்டில் ட்ரோன்கள் சுவிட்சர்லாந்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு காலம் தாழ்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015ம் ஆண்டு இந்த ட்ரோன் கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் பல்வேறு காரணிகளினால் ட்ரோன் கொள்வனவு காலம் தாழ்த்தப்பட்டது.

Related Articles

Back to top button