Local Swiss News

வைக்கோலில் திடீர் தீ… கன்றுக்குட்டி பலி! சுவிஸ் பண்ணையில் பரபரப்பு…

வைக்கோலில் திடீர் தீ… கன்றுக்குட்டி பலி! சுவிஸ் பண்ணையில் பரபரப்பு...

வைக்கோலில் திடீர் தீ… கன்றுக்குட்டி பலி! சுவிஸ் பண்ணையில் பரபரப்பு…

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ஹில்ஃபிகானில்Hilfikon, பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், வெய்ங்காஸ்ஸே Weingasseபகுதியில் உள்ள பண்ணையின் வைக்கோல் சேமிப்பகத்தில் இருந்து புகை வருவதை அவதானித்த பண்ணை உரிமையாளர் உடனடியாக அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கினார்.

இதையடுத்து ரீட்டன்பெர்க் தீயணைப்புப் படையினர் பெரும் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வைக்கோலை வெளியே அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அடர்த்தியான புகையும் மறைந்திருந்த தீப்பிழம்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராட வேண்டியிருந்தது.

வைக்கோலுக்குள் மறைந்திருந்த தீக்கங்குகளை அடைவதற்காக, களஞ்சியத்தின் கூரை மற்றும் பக்கச் சுவர்களின் சில பகுதிகளையே உடைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

7A 3

இந்தச் சம்பவத்தில் ஒரு கன்றுக்குட்டியை மட்டும் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தது. மற்ற விலங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

இரண்டு குடியிருப்பாளர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு வீரர்கள் மருத்துவ உதவியாளர்களால் பரிசோதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை.

வைக்கோல் புளித்ததன் காரணமாக, அது தானாகவே தீப்பற்றியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய ஆர்காவ் மாகாண காவல்துறை விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button