Swiss News In Tamil

குடும்ப மலையேற்றப் பயணம் நீதிமன்ற வழக்கானது! சுவிஸ் உச்ச நீதிமன்றத்தில் தோல்வி!

29p 7

குடும்ப மலையேற்றப் பயணம் நீதிமன்ற வழக்கானது! சுவிஸ் உச்ச நீதிமன்றத்தில் தோல்வி!

சுவிட்சர்லாந்தில் உறவினர்களுடன் மேற்கொண்ட மலையேற்றப் பயணம், இறுதியில் நீதிமன்ற வழக்காக மாறியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

கிளாரஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உறவினர்கள் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மலையேற்றப் பாதையில் இருந்த ஒரு கிளையை, குழுவில் இருந்த ஒருவர் வளைத்து பாதையை ஏற்படுத்த முயன்றுள்ளார்.

29p 7

அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கிளை, அவருக்குப் பின்னால் சில மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த அவரது உறவினரின் தலையில் பட்டுள்ளது.

இதனால் அந்தப் பெண்ணுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் தனது உறவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, 370,000 சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான இழப்பீடும், 20,000 பிராங்குகள் சட்டச் செலவுகளையும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு முதலில் கிளாரஸ் மாகாண நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டது. பின்னர் கூட்டாட்சி உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது.

ஆனால், சமீபத்திய தீர்ப்பில், கீழமை நீதிமன்றத்தின் முடிவை கூட்டாட்சி உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கிளையை வளைத்த நபர், பல மீட்டர் பின்னால் இருந்த உறவினரை அந்தக் கிளை தாக்கும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்க்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் அவரது மீது தவறு இல்லை என்றும், ஏற்பட்ட சேதத்திற்கு அவர் பொறுப்பல்ல என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.