ஒரே நாளில் பல அதிரடி முடிவுகள்! சுவிஸ் மண்டலங்களில் இன்று முக்கிய வாக்கெடுப்பு!
சுவிட்சர்லாந்தில் இன்று முக்கியமான வாக்குப்பதிவு நாள்!
தேசிய அளவிலான இரண்டு முக்கிய வாக்கெடுப்புகளுடன், பல்வேறு மண்டலங்களிலும் முக்கியமான மக்கள் வாக்கெடுப்புகள் இன்று நடைபெறுகின்றன.
இதில், சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள சில முக்கியமான விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதலில் சூரிச் மண்டலம்!
இங்கு மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனங்களில், உதவியுடன் தற்கொலை செய்யும் நடைமுறையை அனுமதிப்பது தொடர்பான சட்ட மாற்றம் குறித்து மக்கள் வாக்களிக்கின்றனர்.
தற்போது சில மருத்துவமனைகள் மற்றும் தனியார் பராமரிப்பு நிறுவனங்களுக்கு இந்த நடைமுறையை தங்களது வளாகங்களில் தடை செய்யும் வாய்ப்பு உள்ளது. அந்த நிலையை மாற்றும் வகையிலான முன்மொழிவுதான் இன்று வாக்காளர்களின் முன் உள்ளது.
அடுத்து ஜெனீவா!
இங்கு இலவச கருத்தடை சாதனங்கள் தொடர்பான மக்கள் முன்முயற்சி வாக்கெடுப்பில் உள்ளது.
இந்த முன்முயற்சி ஏற்றுக்கொள்ளப்பட்டால், பயனுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கருத்தடை முறைகளுக்கான செலவுகளை மண்டலம் ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
அதேபோல் Basel-Stadt மண்டலத்தில், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய காவல்துறை செலவுகள் மற்றும் சேதங்களுக்கு பொறுப்பை ஏற்படுத்தும் வகையிலான Anti-Chaoten Initiative மீதும் மக்கள் வாக்களிக்கின்றனர்.
இதற்கு ஆதரவாளர்கள் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஏற்படும் செலவுகளுக்கு பொறுப்பு வேண்டும் எனக் கூறுகின்றனர்.
ஆனால் எதிர்ப்பாளர்கள், இது கூட்டம் கூடும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நடைமுறையில் இதைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் வாதிடுகின்றனர்.

Bern மண்டலத்தில் கல்வியின் தரத்தை அரசியலமைப்பில் உறுதி செய்யும் வகையிலான Berner Bildungsinitiative குறித்து முடிவு செய்யப்படுகிறது.
Graubünden மண்டலத்தில், வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைப்பது குறித்தும் மக்கள் வாக்களிக்கின்றனர்.
மேலும் Luzern மண்டலத்தில் விளையாட்டு போட்டிகளுடன் தொடர்புடைய ரசிகர் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அதில் அடையாள அட்டை கட்டாயம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அதாவது,
உதவியுடன் தற்கொலை…
இலவச கருத்தடை…
போராட்டங்களுக்கான பொறுப்பு…
கல்வி…
16 வயதில் வாக்களிக்கும் உரிமை…
என பல்வேறு முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் ஒரே நாளில் சுவிஸ் வாக்காளர்களின் முன் வந்துள்ளன.
இன்று நடைபெறும் இந்த வாக்கெடுப்புகளின் முடிவுகள், சம்பந்தப்பட்ட மண்டலங்களின் எதிர்கால சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.



