Local Swiss News

தீ விபத்தால் ரயில் சேவை முடக்கம்… வாட் மாகாணத்தில் பரபரப்பு!

தீ விபத்தால் ரயில் சேவை முடக்கம்... வாட் மாகாணத்தில் பரபரப்பு!

தீ விபத்தால் ரயில் சேவை முடக்கம்… வாட் மாகாணத்தில் பரபரப்பு!

சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் உள்ள வுஃப்லென்ஸ்-லா-வில்லே தொழிற்பேட்டையில் நேற்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இரவு சுமார் 8.30 மணியளவில், தொழிற்பேட்டையில் அமைந்திருந்த ஒரு கிடங்கில் திடீரென தீப்பிடித்துள்ளது. சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவி, மிகப்பெரிய தீ விபத்தாக மாறியது.

தகவல் கிடைத்தவுடன், சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 12 அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இரவு நேரம் கடந்த பின்னரும் தீயை முழுமையாக அணைக்க முடியாமல் போராட்டம் நீடித்தது.

31j 7

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட இடம் ரயில் பாதைக்கு மிக அருகில் இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக புசிக்னி மற்றும் கொசோனே-பெந்தலாஸ் இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB) மாற்றுப் பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button