Local Swiss News

முதியவர்களை குறிவைத்த போலி வர்த்தகர்கள் சிக்கினர்… சூரிசில் அதிரடி கைது!

முதியவர்களை குறிவைத்த போலி வர்த்தகர்கள் சிக்கினர்... சூரிசில் அதிரடி கைது!

முதியவர்களை குறிவைத்த போலி வர்த்தகர்கள் சிக்கினர்… சூரிசில் அதிரடி கைது!

சூரிச் மாகாணத்தின் பாஸர்ஸ்டோர்ஃப் Bassersdorf பகுதியில், முதியவர்களை குறிவைத்து வீடுகளுக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை சூரிச் மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.

சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. தனது தாயாருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மகள், வீட்டின் அழைப்பு மணி ஒலிப்பதை கவனித்தார்.

அப்போது, கொதிகலன் மீட்டரைப் பரிசோதிக்க வந்ததாகக் கூறிய அந்நியர், வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால் மகள் உடனடியாக எச்சரிக்கை விடுத்ததால், அந்த முதியவர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார்.

அந்த நபர், வெளியே காத்திருந்த மற்றொருவருடன் சேர்ந்து காரில் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அதேபோன்ற மற்றொரு புகார் வாலிசெல்லன் பகுதியிலிருந்தும் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் பல ரோந்து குழுக்களை களமிறக்கினர்.

காலை சுமார் 11 மணியளவில், சந்தேகத்திற்கிடமான வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார், அதிலிருந்த 19 வயது மற்றும் 27 வயதுடைய இரண்டு ருமேனிய பிரஜைகளை கைது செய்து மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

27J 9

பின்னர் அவர்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்களுக்கு காவல்துறை முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

முன்னறிவிப்பின்றி வரும் அந்நியர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்… அடையாள அட்டையை சரிபாருங்கள்… சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 117 என்ற அவசர எண்ணில் காவல்துறையை தொடர்புகொள்ளுங்கள்.

முதியவர்களை குறிவைக்கும் இத்தகைய மோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button