துப்பாக்கிக் கடைகளை குறிவைக்கும் சர்வதேச கும்பல்கள்? சுவிஸில் அதிகரிக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்…
துப்பாக்கிக் கடைகளை குறிவைக்கும் சர்வதேச கும்பல்கள்? சுவிஸில் அதிகரிக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்...

துப்பாக்கிக் கடைகளை குறிவைக்கும் சர்வதேச கும்பல்கள்? சுவிஸில் அதிகரிக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்…
சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் மாகாணத்தில் உள்ள ஒரு துப்பாக்கிக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
புதன்கிழமை அதிகாலை சுமார் 3.10 மணியளவில், அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கிருந்து எத்தனை ஆயுதங்கள் திருடப்பட்டன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றபோதும், கொள்ளையர்கள் ஏற்கனவே தப்பிச் சென்றிருந்தனர். பின்னர் கிளாரஸ், ஷ்விட்ஸ், செயின்ட் கேலன் மற்றும் யூரி மாகாண காவல்துறையினர் இணைந்து விரிவான தேடுதல் நடத்தினர். ஆனால், இதுவரை எந்த சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவம் தனிப்பட்ட ஒன்று அல்ல. 2026 ஜனவரி முதல் துப்பாக்கிக் கடைகளில் 23 திருட்டு அல்லது திருட்டு முயற்சிகள் பதிவாகியுள்ளதாக மத்திய காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. லூசெர்ன், துர்காவ் மற்றும் சோலோதூர்ன் உள்ளிட்ட பல மாகாணங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக பிரான்சை மையமாகக் கொண்ட குற்றக் கும்பல்கள் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருடப்படும் ஆயுதங்கள் பின்னர் பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட்டு, குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல்களும் அதிகாரிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





