ஜெனீவா நீதிமன்றத்தின் அதிரடி! புர்கினி தடைக்கு தற்காலிக தடை…
ஜெனீவா நீதிமன்றத்தின் அதிரடி! புர்கினி தடைக்கு தற்காலிக தடை...

ஜெனீவா நீதிமன்றத்தின் அதிரடி! புர்கினி தடைக்கு தற்காலிக தடை…
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புர்கினி அணிவது தொடர்பான சர்ச்சையில் நீதிமன்றம் முக்கிய இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஜெனீவாவின் பொது நீச்சல் குளங்களில் நீண்ட நீச்சல் உடைகள் மற்றும் புர்கினி அணிவதைத் தடை செய்திருந்த புதிய விதிமுறையை, நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை, பொதுமக்கள் வழக்கம்போல புர்கினி மற்றும் நீண்ட நீச்சல் உடைகளை அணிந்து நீச்சல் குளங்களை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புகார் அளித்த தரப்பினர், இந்தத் தடை மதச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் மற்றும் உடல்நல பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடும் என்று வாதிட்டனர். குறிப்பாக தற்போதைய கடும் வெப்ப அலை நிலவும் சூழலில், சிலருக்கு உடலை முழுமையாக மூடும் ஆடைகள் அவசியமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விதிமுறை முதலில் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. முழங்காலுக்கு மேல் முடியும், கைகளைத் திறந்தவாறு வைத்திருக்கும் நீச்சல் உடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.
ஆனால் ஜெனீவா நகரம் மற்றும் பல நகராட்சிகள், இந்தச் சட்டம் தனிநபர் சுதந்திரத்தையும் நகராட்சி அதிகாரங்களையும் மீறுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை, ஜெனீவாவின் பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிய அனுமதி தொடரும்.





