Local Swiss News

நகர விழாவில் ரத்த வெள்ளம்! காரணமே இல்லாமல் தம்பதியரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்!

நகர விழாவில் ரத்த வெள்ளம்! காரணமே இல்லாமல் தம்பதியரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்!

நகர விழாவில் ரத்த வெள்ளம்! காரணமே இல்லாமல் தம்பதியரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்!

சுவிட்சர்லாந்தின் சோலோதூர்ன் நகரில் நடைபெற்ற நகர விழா, மகிழ்ச்சிக்காக வந்த ஒரு தம்பதியருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத துயர அனுபவமாக மாறியுள்ளது.

48 வயதான சமே மற்றும் அவரது 43 வயது மனைவி அன்னா, தங்களுக்குப் பிடித்த டிஜே நிகழ்ச்சியை ரசித்து நடனமாடிக் கொண்டிருந்தபோது, பின்னால் நின்றிருந்த சில இளைஞர்களுடன் ஏற்பட்ட சிறிய தள்ளுமுள்ளு எதிர்பாராத வன்முறையாக மாறியது.

5j 4

“என்னைத் தொடாதே” என்று சமே அமைதியாக கூறிய சில விநாடிகளிலேயே, மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்த அன்னாவும் முகத்தில் பலத்த குத்து வாங்கி மயங்கி விழுந்தார். அவரது மூக்கு உடைந்ததுடன், முகம் முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதிலும் அதிர்ச்சியூட்டும் விஷயம், சமேவின் ஒரு கண் கடுமையாக சேதமடைந்துள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உடனடி அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவரது பார்வையை இழக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு டைட்டானியம் தகடு பொருத்தும் அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. தம்பதியரின் வேண்டுகோளைத் தொடர்ந்து சில சாட்சிகள் மற்றும் காணொளி ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சோலோதூர்ன் மாகாண காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button