சூரிச்சில் அனாதரவாக கிடந்த தமிழரின் சட*லம் : பெரும்சோகத்தில் தமிழ் சமூகம்.!
சூரிச்சில் அனாதரவாக கிடந்த தமிழரின் சட*லம் : பெரும்சோகத்தில் தமிழ் சமூகம்.!

சூரிச்சில் அனாதரவாக கிடந்த தமிழரின் சடலம் : பெரும்சோகத்தில் தமிழ் சமூகம்.!
சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zürich) நகரில் வசித்து வந்த தமிழரான ஷண்முகநாதன் கதிர்காமநாதன் (Shanmuganathan Kathirkamanathan) அவர்கள் காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவு தொடர்பான தகவல் தற்போது சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, ஷண்முகநாதன் கதிர்காமநாதன் அவர்கள் 11 ஜூன் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 20 மே 2026 அன்று உயிரிழந்துள்ளார். இறப்பின் போது சூரிச் (Zürich) நகரின் Langstrasse 209, 8005 Zürich என்ற முகவரியில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவைச் சேர்ந்தவரான இவர், பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. எனினும், அவரது மறைவிற்குப் பின்னர் அவருடைய நெருங்கிய உறவினர்கள் அல்லது இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் எவரும் இதுவரை அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அவரை அறிந்த நண்பர்கள், உறவினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக முன்வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் அவற்றை உடனடியாக பகிர்ந்து, தேவையான இறுதிச் சடங்கு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் சமூகத்தினரிடமும் இந்த அறிவிப்பை முடிந்தவரை பரவலாக பகிர்ந்து, ஷண்முகநாதன் கதிர்காமநாதன் அவர்களின் உறவினர்களை கண்டறிய ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஷண்முகநாதன் கதிர்காமநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்பதுடன், அவருடைய குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்டறியும் முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சூரிச்சில் வசிக்கும் பலரிடம் எமது ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் இவர் தொடர்பான முழுமையான தகவல்கள் இச்செய்தி வெளியிடும் வரை கிடைக்கவில்லை. மேலும் சுவிட்சர்லாந்தில் வசிக்கக்கூடிய புங்குடுதீவைச்சேர்ந்துவர்கள் சிலரிடம் விசாரித்த பொழுதும் குறித்த நபரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து தமிழ் சமூகத்திற்கு இந்த தகவல் முக்கியமானதாக இருப்பதால், அறிந்தவர்கள் தயவுசெய்து பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பெயர்: Shanmuganathan Kathirkamanathan பிறந்த தேதி: 11.06.1961 இறந்த தேதி: 20.05.2026 முகவரி: Langstrasse 209, 8005 Zürich






