சுவிஸ் ஆல்ப்ஸில் கோடீஸ்வரர்களுக்கான பிரம்மாண்ட பாதுகாப்புப் பெட்டகம்
சுவிஸ் ஆல்ப்ஸில் கோடீஸ்வரர்களுக்கான பிரம்மாண்ட பாதுகாப்புப் பெட்டகம்

சுவிஸ் ஆல்ப்ஸில் கோடீஸ்வரர்களுக்கான பிரம்மாண்ட பாதுகாப்புப் பெட்டகம்…
சுவிட்சர்லாந்தின் Obwalden மாநிலத்தில் உள்ள Lungern கிராமத்தில், உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களின் சொத்துகளைப் பாதுகாப்பாக சேமிப்பதற்காக, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குள் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதியுடன் கூடிய பிரம்மாண்ட நிலத்தடி பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
ஒரு தொழிலதிபரின் முயற்சியாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தில், Brünig மலைத் தொடரின் பாறைப் பகுதிகளுக்குள் ஆழமாக சுமார் 20 தனித்தனி நிலத்தடி அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாதுகாப்பு அறைகள் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சேமிக்கப்படவுள்ள சொத்துகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, சுவிஸ் தேசிய வங்கியின் பாதுகாப்பு தரத்துக்கு நிகராக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் தங்களது பணம் மட்டுமின்றி தங்கம், கலைப்பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பிற உயர்மதிப்புள்ள சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான இடமாக இந்த நிலத்தடி வளாகம் உருவாக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஏற்கனவே வங்கி ரகசியம், பாதுகாப்பான சேமிப்பு வசதிகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக உலகளவில் அறியப்பட்ட நாடாகும். இந்த நிலையில், ஆல்ப்ஸ் மலைகளின் இயற்கையான பாறை அமைப்பையே பாதுகாப்பு அரணாக பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த புதிய திட்டம், உலகின் அதி செல்வந்தர்களுக்கான பாதுகாப்பு சேமிப்பு வசதிகளில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தக்கூடும்.





