சுவிட்சர்லாந்தில் குடியேற்றக் கட்டுப்பாடு வீட்டு பற்றாக்குறைக்கு தீர்வல்ல?
சுவிட்சர்லாந்தில் குடியேற்றக் கட்டுப்பாடு வீட்டு பற்றாக்குறைக்கு தீர்வல்ல?

சுவிட்சர்லாந்தில் குடியேற்றக் கட்டுப்பாடு வீட்டு பற்றாக்குறைக்கு தீர்வல்ல?
சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் வீட்டு வசதி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் குடியேற்றம் அல்ல, மாறாக போதிய அளவில் புதிய வீடுகள் கட்டப்படாததே பிரதான பிரச்சினை என ரைஃபைசன் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் Fredy Hasenmaile தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “சுவிட்சர்லாந்தில் கட்டிட நிர்மாணத்திற்கு தேவையான நிலப்பரப்பு போதுமான அளவில் உள்ளது. ஆனால் கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் நிர்வாகத் தடைகள் காரணமாக அந்த நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்து, குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் Swiss People’s Party (SVP) கட்சியின் நிலைப்பாட்டுக்கு நேரடி எதிர்வாதமாக பார்க்கப்படுகிறது. வீட்டு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு குடியேற்றமே முக்கிய காரணம் என அந்தக் கட்சி தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

ஆனால் பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு காரணமாக இருந்தாலும், புதிய குடியிருப்புகள் கட்டும் வேகம் தேவைக்கேற்ப இல்லாததே உண்மையான சிக்கல் என்பதாகும். குறிப்பாக ஜூரிக், ஜெனீவா, பாசல் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வீட்டு வாடகைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், மலிவான வீடுகளை கண்டுபிடிப்பதும் கடினமாகி வருகிறது.
கட்டுமான அனுமதி நடைமுறைகள் நீண்டகாலம் எடுப்பது, சுற்றுச்சூழல் விதிமுறைகள், மற்றும் திட்ட அனுமதிகளில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவை புதிய வீடுகள் உருவாகும் வேகத்தை குறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. © KeystoneSDA






