சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து தரம் உயர்வு
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து தரம் உயர்வு

சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து தரம் உயர்வு
சுவிட்சர்லாந்தில் பிராந்திய ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கடந்த ஆண்டுகளை விட அதிக நேர்த்தியுடனும் மேம்பட்ட தரத்துடனும் இயங்கிவருவதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
“சுவிட்சர்லாந்து மத்திய போக்குவரத்து அலுவலகம் (BAV)” (BAV) வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் 95 சதவீதத்திற்கும் அதிகமான ரயில்கள் மற்றும் 90 சதவீத பிராந்திய பேருந்துகள் மூன்று நிமிடங்களுக்குள் மட்டுமே தாமதத்துடன் தங்கள் இலக்கை சென்றடைந்துள்ளன.
இது 2024 உடன் ஒப்பிடுகையில் அனைத்து பிராந்திய போக்குவரத்து சேவைகளிலும் நேர்த்தி மேம்பட்டுள்ளதாக காட்டுகிறது.

ரயில் மற்றும் பிராந்திய பேருந்து பயணங்களின் தரம் தொடர்பிலும் முன்னேற்றம் தொடர்ந்துள்ளதாக “சுவிட்சர்லாந்து மத்திய போக்குவரத்து அலுவலகம் (BAV)” தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பயணத்திற்கு முன்பும் பயணத்தின் போதும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தில் பல அளவுகோள்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுத்தம் தொடர்பான மதிப்பீடுகள் இன்னும் குறைவாக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தெளிவான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ரயில் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் சுத்தம் தொடர்பான நிலைமை முன்பைவிட மேம்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
© KeystoneSDA





