சுவிட்சர்லாந்தில் 400 மில்லியன் செலவில் மிகப்பெரிய சாக்லேட் பூங்கா திட்டம்
சுவிட்சர்லாந்தில் 400 மில்லியன் செலவில் மிகப்பெரிய சாக்லேட் பூங்கா திட்டம்
சுவிட்சர்லாந்தின் Broc நகரத்தில், உலகப் புகழ்பெற்ற Nestlé நிறுவனம் மிகப்பெரிய சாக்லேட் தீம் பூங்கா ஒன்றை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கெய்லர் சாக்லேட் பூங்கா (“Parc du chocolat Cailler”) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட ஐமடங்கு அதிகமாக, சுமார் 400 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் செலவில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மையமாக இருக்கும் கெய்லர் சாக்லேட் அருங்காட்சியகம் (Maison Cailler) அருங்காட்சியகம் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போதைய அனுபவத்தை விட பல மடங்கு விரிவானதாக மாற்றப்படவுள்ளதால், பார்வையாளர்கள் முழுமையான அனுபவத்தை அனுபவிக்க சுமார் ஐந்து மணி நேரம் வரை செலவிடக்கூடும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது Lindt Home of Chocolate போன்ற பிரபல சுற்றுலா மையங்களுடன் போட்டியிடும் அளவுக்கு வளரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டத்தில் ஹோட்டல்கள், உணவகங்கள், நலவாழ்வு மையம் மற்றும் கோகோ செடிகள் வளர்க்கப்படும் பசுமை மாளிகைகள் போன்ற பல வசதிகளும் சேர்க்கப்படவுள்ளன. கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் முதல் கட்ட திறப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்துடன் இணைந்து பொது போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன், புதிய அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் Gruyère பிராந்தியத்தில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என திட்ட ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
WRS





