Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து பாடன் நகரில் லெஸ்பியன் ஜோடிகள் செய்த செயல்

சுவிட்சர்லாந்து பாடன் நகரில் ஒரு லெஸ்பியன் ஜோடியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்மையில் பாடனிலுள்ள உள்ள ஒரு பார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறித்த லெஸ்பியன் ஜோடிகள் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தனர்.

அதில் அவர்கள் குறிப்பிடுகையில்இ ஞாயிற்றுக்கிழமை மதியம்இ நாம் இருவரும் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பீர் ஆர்டர் செய்தோம். ஆனால் சற்று நேரத்தின் பின்னர் பார் ஊழியரகள், நாம் பீருக்கு செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து விட்டு எங்களை உணவகத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள்’ என்று அந்த பெண்கள் கூறினார்கள்.

நீங்கள் செய்யும் விடயங்களை பார்க்க மற்றவர்களுக்கும் முதலாளிக்கும் பிடிக்கவில்லை என அவர்கள் காரணம் கூறியிருந்தார்கள் எனவும் குறிப்பிட்ட லெஸ்பியன் பெண்கள் கூறினார்கள்’.

இது பற்றி மேலும் குறிப்பிட்ட அந்த பெண்கள்இ இச்சம்பவத்தினால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததோடு அவமானத்திற்கும் உள்ளானோம். அங்கு ‘நாங்கள் அவ்வப்போது கைகளைப் பிடித்து முத்தமிட்டோம்.’ நாமும் மற்ற ஜோடிகளைப் போலவே முற்றிலும் சாதாரணமாகவே நடந்து கொண்டோம். ஆனால் ஒரு லெஸ்பியன் ஜோடி ஒரு பாரில் நேரத்தை செலவிடுவதற்கு கூட உரிமை இல்லையா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து பாடன் நகரில் ஒரு லெஸ்பியன்

இரண்டு பெண்களும் மோசமான பாலியல் நடவடிக்கை காரணமாகவே வெளியில் அனுப்பியதான பார் உரிமையாளர் குறிப்பிடுகிறார். அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தேஜா முக்ஞ்ஜாக் மற்றும் சப்ரினா பர்கர் என்ற இரு பெண்களுமே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் உடலுறவு செய்வதைப்போன்று செயற்பட்டதாகவும் மேலும் கூச்சலிட்டு தங்களின் பாலியல் செய்கைகளை மேற்கொண்டதாவும் குறிப்பிடுகிறார்.

எனினும் இதனை மறுத்த பெண்கள் நாங்கள் பெண்கள் என்பதனாலையே வெளியேற்றப்பட்டதாகவும் இதனால் தமக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகுஇ அவர்கள் ஆர்காவ் கன்டோனல் போலீசில் சென்று புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2020 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாகுபாடு சட்டத்தின்படி, பாலியல் நோக்குநிலை காரணமாக வெளியேற்றப்படுவது கிரிமினல் குற்றமாகும். போலீசார் குறித்த பெண்கள் முறைப்பாட்டை  வரவேற்று பிரச்சனையை தீவிர விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.#

போலீசார் விசாரணைக்கு பதிளழித்த பார் உரிமையாளர் தனக்கு எந்த வித பாகுபாடும் இல்லை. எல்லா சமூகத்தினருக்கும் எனது பார் திறந்தே இருக்கும். எந்த பாலினத்தவருக்கும் இங்கு தடையில்லை. ஆனால்  ‘அவர்கள் உடலுறவில் ஈடுபடுவதைப் போலவே அவர்கள் அசைவுகளைச் செய்தனர்’ மேலும் நாம் திருப்பியனுப்ப முற்பட்டபோது பணியாளர் மீது பியரை வீசி அவரை அசிங்கப்படுத்தினார்கள். என தனது பக்க நியாயத்தை சூறியிருந்தார்.

எனினும் இதனை முற்றாக மறுத்த அந்த பெண்கள் கடை உரிமையாளர் மீது வழங்குத்தாக்கல் செய்தனர். குறித்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றிருந்தாலும் தற்போது குறிப்பிட்ட சம்பவத்தின் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சாட்சியாக வைத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

அங்கு இடம்பெற்ற காட்சிகளை பார்வையிட்ட நீதிபதி, கடை உரிமையாளர் குறிப்பிட்டது போல குறித்த பெண்கள் இருவரும் அருவருக்கத்தக்க பாலியல் செய்கைகளில் ஈடுபடவில்லை என்பது நிரூபணமானது. அவர்கள் இருவரும் சாதாரணமாகவே முத்தமிட்டு பேசிக்கொண்டிருந்தமை காட்சிகளில் பதிவாகியிருந்தது. எனவே பெண்களுக்கு சார்பாக நீதிபதி தீர்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 400 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டதோடு இரண்டு வாதிகளின் சட்டச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பார் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button