Swiss News In Tamil

சென்ட்காலன் Zuzwil பகுதயில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்ப்பு

கன்டோன் சென்ட்காலனில் நேற்று புதன் கிழமை இரவு Zuzwil என்ற இடத்தில் உள்ள ATM இயந்திரம் ஒன்று திருடர்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை அறியப்படாத பெறுமதியான பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சென்ட்காலன் கன்டோனல் பொலிஸார் தெரிவித்தனர்.

4d1f164d ba18 4390 9312 7a4f7fc8d673

பொருள் சேதம் ஒரு லட்சம் பிராங்குகளுக்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

போலீசாரின் முதல்கட்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவர் சம்மந்தப்பட்டிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

புதன்கிழமை அதிகாலை 2:40 அளவில் வெடிமருந்துகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை பெருமளவில் சேதப்படுத்தி அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

Geldautomat Explosion Zuzwil SG

கொள்ளையடித்த தொகை இதுவரை சரியாக தெரியவில்லை. சாதாரணமாக ஒரு ஏடிஎம்மில் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

குறித்த ஏடிஎம் இயந்திரம் இருந்த பகுதி பல கடைகள் அமைந்திருந்தமையும் குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஏடிஎம் இருந்த தபால் அலுவலகக் கிளை தற்போதைக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

n wide2x 16x9 far 1

குற்றத்திற்குப் பிறகு சென்ட்காலன் மற்றும் துர்காவ் கன்டோனல் காவல்துறையினரின் இணைந்து பல ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும் தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தது.

ஒரு போலீஸ் நாய் மற்றும் ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டும் குற்றவாளிகள் இதுவரையில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Back to top button