Swiss News In Tamil

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்தவேண்டும் : சுவிட்சர்லாந்து ஜனாதிபதி

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்த வேண்டுமென சுவிட்சர்லர்நது ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நிச்சயமாக சமாதான பேச்சுவார்த்தைகள் ரம்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் பங்குபற்றுதல் இன்றி இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நிறைவு பெறாது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன்
உக்ரைன்

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது துரித கதியில் இலக்கினை எட்ட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, பிரேஸில், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை இணைத்துக் கொண்டு இந்த சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button