பெர்னில் ருமேனிய தூதரகத்திற்கு தீ வைப்பு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை…
பெர்னில் ருமேனிய தூதரகத்திற்கு தீ வைப்பு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை...

பெர்னில் ருமேனிய தூதரகத்திற்கு தீ வைப்பு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை…
பெர்னில் உள்ள ருமேனிய தூதரகத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை பிற்பகல், தூதரகத்தின் வேலி அருகே எரியும் பொருள் ஒன்று வேண்டுமென்றே வைக்கப்பட்டதாக பெர்ன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த தாவரப் பகுதிகளுக்கும் பரவியது.
தூதரகத்தின் தகவலின்படி, அங்கு பணியாற்றிய ஊழியர்களே முதலில் தீயை அணைத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், தீ மீண்டும் பரவாமல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் சொத்து சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்றபோது, தூதரகப் பகுதியில் சென்ற பாதசாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை போலீசார் தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பெர்ன் மாகாண காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தீ வைக்கப்பட்டதன் பின்னணி என்ன? இதற்குப் பின்னால் யார் உள்ளனர்? என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





