“பிரம்மாண்டமான மசூதி வேண்டாம்!” – செயின்ட் கேலனில் SVP அதிரடி….
“பிரம்மாண்டமான மசூதி வேண்டாம்!” – செயின்ட் கேலனில் SVP அதிரடி....

“பிரம்மாண்டமான மசூதி வேண்டாம்!” – செயின்ட் கேலனில் SVP அதிரடி….
சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் நகரில் திட்டமிடப்பட்டுள்ள புதிய மசூதி தொடர்பாக தற்போது அரசியல் ரீதியாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது!
நகரின் மேற்குப் பகுதியில், ஃபர்ஸ்டன்லாண்ட்ஸ்ட்ராஸ் பகுதியில் “எல்-ஹிதாஜே” இஸ்லாமிய-அல்பேனிய சமூகத்தினரால் புதிய மசூதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 300 முதல் 400 பேர் வரை தங்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்தின் ஆரம்பகட்ட வடிவமைப்பு, பெரிய கண்ணாடி முகப்பைக் கொண்ட வட்ட வடிவ கட்டிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக சுவிஸ் மக்கள் கட்சியின் செயின்ட் கேலன் கிளை தற்போது மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
திட்டத்தின் அளவு காரணமாக போக்குவரத்து நெரிசல், சத்தம், பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறத்தின் தோற்றம் உள்ளிட்ட விடயங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என SVP கவலை தெரிவித்துள்ளது.
“செயின்ட் கேலனில் இப்படியான பிரம்மாண்டமான மசூதி எங்களுக்கு வேண்டாம்” என SVP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தத் திட்டத்திற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என SVP கோரியுள்ளது.

ஆனால் “எல்-ஹிதாஜே” அமைப்பின் இமாம் மெஹாஸ் அலிஜா, வெளிநாட்டு இஸ்லாமிய அரசுகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து எந்த நிதியுதவியும் பெறப்படவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமூக நன்கொடைகள், சொத்து விற்பனை மற்றும் வங்கிக் கடன் மூலமே திட்டத்துக்கு நிதியளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த மசூதி திட்டத்துக்கான அதிகாரப்பூர்வ கட்டிட விண்ணப்பம் இதுவரை செயின்ட் கேலன் நகரத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





