Fribourg கன்டோனில் மோட்டார் சைக்கிள் விபத்து: 21 வயது இளைஞர் உயிரிழப்பு
Fribourg கன்டோனில் மோட்டார் சைக்கிள் விபத்து: 21 வயது இளைஞர் உயிரிழப்பு

Fribourg கன்டோனில் மோட்டார் சைக்கிள் விபத்து: 21 வயது இளைஞர் உயிரிழப்பு
பிரிபூர் (Fribourg) கன்டோனின் குருயேர் (Gruyère) பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரிபூர் கன்டோனல் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இந்த விபத்து நேற்று மாலை என்னி (Enney) பகுதிக்குள் நுழைவதற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய இளைஞர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, எதிர்புற பாதைக்குள் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்குப் பின்னர் போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக முதல் உதவிகளை வழங்கியுள்ளனர். கடுமையாக காயமடைந்த இளைஞருக்கு உயிர் காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், காரை ஓட்டிச் சென்ற 44 வயது நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பின்னர் மீட்பு மற்றும் விசாரணை பணிகள் காரணமாக Route de l’Intyamon சாலை சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது.
இந்த விபத்துக்கான சரியான காரணங்களை கண்டறிய பிரிபூர் கன்டோனல் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்: பிரிபூர் கன்டோனல் காவல் துறை





