Swiss News In Tamil

SBB S-Bahn மீது பாஸல் – Laufen இல் வெடிகுண்டு மிரட்டல்.!!

ஞாயிற்றுக்கிழமை மாலை, பாஸல்-லேண்ட்ஷாஃப்ட் மண்டலத்தில் உள்ள Laufen ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாரிய போலீஸ் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

S-Bahn மீதான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், Laufen ரயில் நிலையத்தை உடனடியாக சுற்றுவளைத்தனர். Basel-Landschaft பொலிசார், போக்குவரத்து பொலிஸில் இருந்து நிபுணர்கள் உட்பட, அவசரகால சேவைகள் தளத்தில் குவிக்கப்பட்டனர்.

இதன் பின்னர ரயிலில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரு திசைகளிலும் இரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவின் போது வெடிகுண்டு சம்மந்தப்பட்ட எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெடிகுண்டு மிரட்டல்

சுமார் மூன்று மணி நேரம் கழித்து, தளம் சுத்தம் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

#### வெடிகுண்டு மிரட்டல் வந்தது எப்படி?

வெடிகுண்டு மிரட்டல்

தகவல்களின்படி, வெடிகுண்டு எச்சரிக்கை SBB செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தின் வழியாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் இருந்த பயணி ஒருவர் அவசர பொத்தானை பயன்படுத்தி அலாரத்தை இயக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து தீவிரமாக எடுத்துக்கொண்டு, இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான அவசரநிலைகளில் மாத்திரம் அவசரகால அழைப்புகள் அல்லது அவசரகால பொத்தான்களை பயன்படுத்துமாறு காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில் இதுபோன்ற ஆதாரம் இல்லாத செயற்பாடுகளால் மக்கள் குழப்பமடையலாம் எனவும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(c)polizei-basel-landschaft

Related Articles

Back to top button